வருவாய் நிர்வாக பணியின் ஒரு பகுதியாக நிலங்கள் சர்வே செய்யப்படும். இவ்வாறு பொதுவாக நில அளவை பணி நடக்கும் போது, அது அந்த துறையின் நிர்வாக பணி என்று பட்டா நில உரிமையாளர்கள் ஒதுங்கி இருக்க கூடாது. இது போன்ற நடவடிக்கைகளின் போது, குறிப்பிட்ட சில பிரச்னைகளுக்கு தீர்வு பெற சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
1 சர்வே செய்யும்போது, நிலத்தின் மொத்த பரப் பளவில் வேறுபாடு தெரிய வந்தால், அது குறித்தும் வட்டாட்சியரிடம் மனு கொடுத்து தீர்வு பெறலாம். அளவு மாறுபட்டால். 1 அளவை செய்யப்படும் நிலத்தின் உரிமையாளார், நில்த்துக்கும், எப்.எம்.பி., வரைபடத்துக்கும் உள்ள வேறுபாடுகளை உரிய ஆதார ஆவணங்களை அளித்து சரி செய்து கொள்ளலாம்.
2 பக்கத்து நிலத்தின் உரிமையாளரால் அல்லது வெளிநபரால் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகள் குறித்தும் சர்வேயின் போது உரிய ஆவண ஆதாரங்களுடன் அளித்து நடவடிக்கை எடுக்க கோரலாம்.அளவைக் கற்கள் காணாமல் போனால்…1 நிலத்தின் முச்சந்தி கற்கள் காணாமல் போயிருந்தால், அது குறித்து நில அளவை மற்றும் வருவாய் அதிகாரிகளிடம் மனு அளித்து குறை பாட்டை நிவர்த்தி செய்துக் கொள்ளலாம்.2 புஞ்சை, நஞ்சை மாற்றம் காரணமாக ஏற்பட்டு உள்ள விவர வேறுபாட்டு பிரச்னை களையும் நில அளவையின் போது சரி செய்துக் கொள்ளலாம். 3 நிலத்தின் குறுக் காகவோ அல்லது அதன் ஒரு ஒரத்தில், ஆறு, வாய்க்கால், சாலை, வண்டி பாதை இருந்தால், அந்த பகுதியை, பொது நலனுக்காக விட்டுக் கொடுக்க, வட்டாட்சியருக்கு மனு அளித்து, மனையின் எல்லைகளை திருத்திக் கொள்ளலாம்